என் மலர்
நீங்கள் தேடியது "பொதுக்குழு கூட்டம்"
- அதிமுகவினர் மத்தியில் "டான்?" போல காட்டுமே தவிர, அவர் டம்மி என்பது மக்களுக்கும் பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும்.
- எடப்பாடி பழனிசாமியின் பயத்தை போக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு.
எடப்பாடி பழனிசாமி, பயத்தை போக்க டோப்பட்ட மேக் அப் தான் அதிமுக பொதுக்குழு கூட்டம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைப்பதற்குகூட "போலி விவசாயி" எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை.
10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அண்ணா திமுக அமித்ஷா திமுகவாக மாறி விட்டதை மறைக்க முயற்சித்தாலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பாஜகவின் அடிமை பழனிசாமி என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லும் வகையிலேயே உள்ளன.
"கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை; கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்" என்ற தீர்மானம் பார்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் மத்தியில் "டான்?" போல காட்டுமே தவிர, அவர் டம்மி என்பது மக்களுக்கும் பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும்.
அதிமுக பொதுக்குழு நடப்பதற்கு இரண்டு நாள் முன்புகூட குஜராத்தில் பேசிய அமித்ஷா, ''பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்'' என்றார். "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" என்ற வசனம் போல மாப்பிள்ளை பழனிசாமிதான்.
ஆனால், அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதுதான் அமித்ஷா சொன்ன வார்த்தையின் அர்த்தம். ஆனால், அதிமுக பொதுக்குழுவில், "அதிகாரம்'' என்ற போலி சட்டையை பழனிசாமிக்கு மாட்டியிருக்கிறார்கள்.
அமித்ஷா அழைப்பின் பேரிலே டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி கார்கள் மாறி அமித்ஷாவை சந்தித்தும், முகமூடி அணிந்து வெளி வந்ததையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்தார்கள். அந்த அமித்ஷா சொல்வதை மீறி எதையுமே எடப்பாடி பழனிசாமியால் செய்ய முடியாது என்பது அதிமுகவினருக்கே நன்கு தெரியும். எடப்பாடி பழனிசாமியின் பயத்தை போக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு.
மெகா கூட்டணி அமைப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமியை நம்பி எந்த கட்சியும் வர தயாராக இல்லை; 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு எந்த ஆளுமையும் இல்லை; மக்கள் செல்வாக்கும் கிடையாது என்பது தெள்ளத்தெளிவாக உணர்ந்த அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை மிரட்டி அடிபணிய வைத்து கூட்டணியை அவரே அறிவித்தார் என்பதுதானே நிஜம்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வருகிறார்கள். அதற்காக அமித்ஷாவை கண்டித்து ஒருவார்த்தை கூட பேசாத தொடைநடுங்கி எடுபுடி பழனிசாமிக்குதான் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் என்பது மிக சிறந்த நகைச்சுவை.
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒன்றிய பாஜக நிராகரித்துவிட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசைக் கண்டிக்க தைரியம் இல்லாத பழனிசாமி, திமுக அரசைக் கண்டித்திருப்பது பச்சைத்துண்டு அணிந்துகொண்டு பச்சைதுரோகம் செய்யும் போலி விவசாயி பழனிசாமி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைப்பதற்குகூட "போலி விவசாயி" எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை.
உண்மையான விவசாயியாக இருந்தால் பிரதமரை டெல்லி சென்று சந்தித்து 22 சதவீதம் வரை உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கினால்தான் கூட்டணியில் தொடருவோம் என நிபந்தனை விதிக்க ஆளுமை வேடம்போடும் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியும் இருக்கிறதா?
கோவை, மதுரை நகரங்களின் மெட்ரோ திட்டங்களை ரத்து செய்த மோடி அரசை கண்டிப்பதற்கு பதில், ஒன்றிய பாஜக அரசு கூறிய மொக்கையான காரணத்தையே அதிமுக பொதுக்குழு தீர்மானத்திலும் நியாயப்படுத்தி கோவை, மதுரை மக்களுக்கு பெரும் துரோகத்தை செய்திருக்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்துவரும் வளர்ச்சியை தினந்தோறும் பார்த்து வயிற்றெரிச்சலில் தவிக்கும் எடப்பாடி பழனிசாமி, போகின்ற இடங்களிலெல்லாம் புலம்புவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதையே அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களாகவும் வடித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடன் சுமை கட்டுக்குள் இருப்பதாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் கடன் சுமை அதிகரித்துவிட்டதாக அதிமுக பொதுக்குழுவில் அவதூறு பரப்பப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு திமுக ஆட்சி நிறைவு பெறும்போது தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 1,01,349 கோடி ரூபாய்தான். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி நிறைவடையும்போது 2021ம் ஆண்டில் தமிழ் நாட்டின் கடன் 4,80,300 கோடி ரூபாய். அதாவது 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் சுமார் 5 மடங்கு அதாவது கிட்டதட்ட 500 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம் திமுக ஆட்சியில் தற்போது 9 லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் இருந்தாலும் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 93 சதவீதம் அளவிற்கே கடன் உயர்ந்துள்ளது.
ஒரு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிஎஸ்டிபியை ஒப்பிடும்போது கடன் அளவு எவ்வளவு என்பதுதான் கடன் சுமையை தீர்மானிக்கும் காரணி. அந்த வகையில் தமிழ்நாட்டின் DEPT TO GSDP RATIO 26.4 சதவீதம்தான். தமிழ்நாடு நிதி பொறுப்புச் சட்டம் 2003 நிர்ணயித்த கடன் வரம்பைவிட குறைவான அளவில்தான் தமிழ்நாட்டின் கடன் அளவு உள்ளது.
"முதலீடுகள் இல்லை, நிறுவனங்கள் இடம் பெயர்கின்றன, வேலை வாய்ப்பு இல்லை, ஏமாற்றும் புள்ளி விவரங்கள்" என பொத்தாம் பொதுவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய அதிமுக, தனது ஆட்சிக்காலத்தில் இவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன; அதிலிருந்து திமுக ஆட்சியில் இவ்வளவு கோடி குறைவாக உள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'இந்த' நிறுவனம் தற்போது வேறு மாநிலத்திற்கு சென்று விட்டது, அதிமுக ஆட்சியில் இத்தனை இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கினோம்; தற்போது அதைவிட குறைந்த வேலை வாய்ப்புகளே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டு கூறியிருந்தால் முதலீடு ஈர்ப்பு, தொழில் வளர்ச்சி விஷயத்தில் அதிமுக ஆட்சியின் யோக்கியதை தெரிந்துவிடும் என்பதால் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டை கூறியிருக்கிறது அதிமுக.
2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் 15,543 கோடி ரூபாய் முதலீட்டில் 10,316 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளித்திடும் 21 தொழிற்சாலைகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு; அவற்றுள் 12 தொழிற்சாலைகள் மட்டுமே தொடங்கப்பட்டன. ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 31 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல் கட்டமாக 46 தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை தொடங்கிவிட்டன. அதனால்தான் தமிழ்நாடு கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 11.19% இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இந்த வளர்ச்சியை பழனிச்சாமியால் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஒன்றிய பாஜக அரசு வழங்கிய புள்ளி விவரத்தையே "பொய்யான புள்ளி விவரம்" என்று கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தில் நீதித்துறையின் மதச்சார்பின்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அடம்பிடிக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக திமுக கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை வட மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் உள்பட 120 மக்களவை எம்.பிக்கள் ஆதரித்துள்ளனர்.
ஆனால் மற்ற மாநிலங்களில் மதக் கலவரம் செய்தே ஆட்சியை மாற்ற பாஜக முயற்சி செய்து பலனடைந்ததால் தமிழ்நாட்டிலும் அந்த பலனை அறுவடை செய்யலாம் என்ற நப்பாசையில் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் கலவர அரசியலுக்கு துணை போகும் வகையில் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.
வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது; தீபம் ஏற்றிவிட்டதை மறைத்து, தீபமே ஏற்ற அனுமதி மறுக்கிறது திமுக அரசு என்று அவதூறு பரப்பும் மதவெறி கும்பலுக்கும் அவர்களுக்கு துணையாக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மதசார்பின்மைக்கு முன்மாதிரியாக திகழும் தமிழ்நாட்டு மக்கள் 2026 தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.
திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது. 40 திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. மொத்தமாக 404 திட்டங்கள் அரசின் செயல்பாட்டில் உள்ளன. 37 திட்டங்கள் ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு இல்லாமல் நிலுவையில் உள்ளன. 64 திட்டங்கள் மட்டுமே இன்னும் அரசு நடவடிக்கை எடுத்துக் கொள்ளாத திட்டங்களாக உள்ளன.
தேர்தல் வாக்குறுதியாக சொல்லப்படாத இல்லம் தேடி கல்வி, காலை உணவு திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், இன்னுயிர் காக்கும் 48 திட்டம் போன்ற திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி சொல்லியது மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தமிழ்நாட்டு மக்கள் பாராட்டுவதாலேயே எடப்பாடி பழனிசாமி பொய்யையும் அவதூறையும் பரப்பி ஆதாய அடைய முயற்சிக்கிறார்.
பாஜகவின் மதவெறி கொள்கைக்கு எதிரியாக இருப்பது திமுக மட்டுமல்ல தமிழ்நாடே என்பதால் தமிழ்நாட்டுக்கு துரோகத்தையும் வஞ்சகத்தையுமே மட்டுமே ஒன்றிய பாஜக அரசு துணிந்து செய்கிறது. அப்படியிருந்தும் பாஜகவுடன் கூட்டணிவைத்து எட்டப்பன் வேலைபார்க்கும் எடப்பாடி பழனிசாயின் புலம்பலை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள்; 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அரசியல்ல ஒருவரை அழிப்பதற்கு இப்படி குற்றச்சாட்டுகளா சொல்ல முடியும்.
- உள்துறை அமைச்சகமும், முதலமைச்சரும் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கரூர் சம்பவத்தை தொடர்ந்து, தவெக முடங்கிவிட்டது. மாவட்ட செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தவெக நிர்வாகிகள் ஓடி விட்டனர். பதுங்கிவிட்டனர் என்றெல்லாம் பேச்சு.
யார் ஓடியது. உங்கள் தந்தை முன்னாள் அமைச்சர் கருணாநிதி கைது செய்யும்போது யார் ஓடியது? சொந்த மகனே ஓடினார். திமுகவிற்கு வரலாறு தெரியுமா?
வரலாற்று பற்றி பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள். தவெகவிற்கு வரலாறு தெரியாமல் இல்லை. எங்களுக்கு மக்கள் இயக்கமாக இருக்கவும் தெரியும், உங்களின் சூழ்ச்சிகளை உச்சநீதிமன்றத்தில் தூக்கி எறியவும் தெரியும்.
என்ன செய்துவிட்டோம்.. மக்கள் இயக்கமாக இருந்து மக்கள் கட்சி உருவாக்கி, மக்களிடம் போய் பிரசாரம் செய்தாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நிர்வாக மாற்றங்களை உருவாக்க முடியும் என்று பேசினோம்.
அரசியல்ல ஒருவரை அழிப்பதற்கு இப்படி குற்றச்சாட்டுகளா சொல்ல முடியும். மக்களின் ஒரே நம்பிக்கை தலைவர் விஜய்.
கரூர் சம்பவத்தில் ஒட்டுமொத்த காவல்துறையும் செயலிழந்து இருக்கிறது. பொதுக்கூட்டத்தில் எவ்வளவு மக்கள் கூட்டம் வரும் என்று அரசுக்கு தெரியாது என்றால் உள்துறை அமைச்சகமும், முதலமைச்சரும் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்.
கரூர் ஒரு மோசமான இடம் என்றும், அங்கு இருப்பவர் செந்தில் பாலாஜி ஒரு ரவுடி என்று தெரியாதா? என எங்களுக்கு அட்வைஸ் செய்கிறது திமுகவின் வாடகை வாய்கள். இன்னும் 6 மாதங்களில் தெரியும் யார் ரவுடி.. யார் அதிகாரம் பண்றது என்று தெரியும்.
புது அரசியலை உருவாக்க வந்திருக்கிறோம். ஊழல் குடும்பத்தை அழிக்க வந்திருக்கிறோம்.
கரூர் சம்பவத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியில் ஆக்டிங்கை பார்த்திருப்பீர்கள். மறுநாள் காளையில் துபாயில் இருந்து ஒருவர் வந்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏதோ தமிழ்நாட்டிற்கு தியாகம் செய்வதற்காக துபாய்க்கு உண்ணாவிரதம் செய்ய போனதுமாதிரியும், அங்கிருந்து மக்களுக்காக ஓடி வந்தது போலவும்.. வந்து ஒரு மணி நேரம் கூட மருத்துவமனையில் அவர் இல்லை.
நமக்க அதிகாரம் இருந்திருந்தால், பாதிக்கப்பட்ட மக்களுடன் கடைசி நிமிடம் வரை இருந்திருப்போம். ஒரு மணி நேரம் விசிட்டிற்கு பிறகு பேட்டியில், தவெக தலைவரை கேள்வி கேளுங்கள் என்கிறார்.
உங்கள் பொதுச் செயலாளர்கள் தூங்கி எழுந்திருக்க முடியாமல் இருக்கிறார்கள். அதற்கு எங்கள் பொதுச் செயலாளர்கள் எவ்வளவோ மேல்.
உங்கள் பொதுச் செயலாளரை (அமைச்சர் துரைமுருகன்) முதலில் எழுந்து ஒரு வாக்கிங் செய்ய சொல்லுங்கள். சட்டசபையில் உட்கார்ந்துக் கொண்டு கிண்டல், கேலி பண்ணிக் கொண்டு இருக்கிறார். அவை நாவடக்கம் இல்லை அவருக்கு.
எப்போது பார்த்தாலும் சட்டசைபயில் ஐயா உதயநிதி வாழ்க.. உதயநிதி வாழ்க என்கிறார். உதயநிதி என்ன தியாகியா? இதுபோன்று கேள்வி கேட்டால் போதும் என் மீது ஒரு எப்ஐஆர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என்பதால் தவெகவை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
- இளைஞர் புரட்சி 2026-ம் ஆண்டு உருவாகி கொண்டிருக்கிறது ஆதவ் அர்ஜூனா.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய் 9 மணி நேரம் அழுதார். மக்கள் உணர்வை வைத்து அரசியல் செய்வது தமிழக வெற்றிக் கழகம் கிடையாது.
கரூர் மக்கள் உயிரிழந்த அந்த 30 நாட்களும் கண்ணீர் சிந்தியது மட்டும் அல்லாமல் அவர்களை சந்தித்தபோது ஒரு புகைப்படத்தை கூட விஜய் வெளியிடவில்லை.
தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என்பதால் தவெகவை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
கூட்டத்திற்கு நிர்வாகிகள் பத்தாயிரம் பேர் வருகிறார்கள் என்று சொல்ல முடியுமே தவிர மக்கள் எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று எங்களால் எப்படி கணிக்க முடியும்?
இதெல்லாம் உளவுத்துறைக்கு தெரியாதா? இது தெரியவில்லை என்றால் உள்துறை அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்.
சட்டமன்றத் தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே விஜய், உங்களுக்கு நன்றி இல்லையா?
நாங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமென்றாலும் எடுப்போம் என்கிறார் துரைமுருகன். தைரியம் இருந்தால் என் தலைவர் விஜய் மீது கை வையுங்கள் பார்ப்போம். முதலில் அவர் வீட்டிற்கு செல்லுங்கள், ஒட்டுமொத்த கல்லூரி இளைஞர்களும் உங்கள் வீட்டிற்கு வருவார்கள்.
இளைஞர் புரட்சி 2026ம் ஆண்டு உருவாகி கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நம் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து ஆளுங்கட்சிக்கு வயித்தெறிச்சல்.
- தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணத்தை தொடங்க இருக்கிறேன்.
மதுராந்தகத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.
அப்போது அவர், செங்கல்பட்டு மாவட்ட பாமக பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை வழங்கினார்.
பொதுக்குழு கூட்டத்தில் அவர் கூறியதாவது:-
மாமல்லபுரத்தில் கடந்த மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டின் திருஷ்டிதான் தற்போது நிகழ்ந்த பிரச்சனைகளுக்கு காரணம்.
நம் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து ஆளுங்கட்சிக்கு வயித்தெறிச்சல். அந்த வயித்தெறிச்சலில் வந்த திருஷ்டிதான் கட்சியில் தற்போது நடக்கும் சம்பவங்கள். ஆனாலும் திருஷ்டி எல்லாம் போய்விட்டது.
விரைவில் திருப்போரூர் முருகனை வணங்கி தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணத்தை தொடங்க இருக்கிறேன்.
2026 தேர்தலில் நிச்சயமாக பாமக அங்கமாக இருக்கும் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும். கூட்டணி ஆட்சியில் அங்கமாக இருப்போம்.
சமூக வலைதளங்களில் நம்மை நாமே எதிர்த்து பதிவுகளை போட வேண்டாம். நம் எதிரி திமுக தான்.
பாமகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் வேற லெவலில் இருக்கும். தம்பிகளா நீங்க ரெடியா?
பாமகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் எதிர்க்க வேண்டியது திமுகவைதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் கழக அரசுக்குப் பாராட்டு.
- ரெயில்வே திட்டங்களில் தமிழ் நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்.
மதுரை:
மதுரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
1. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி தினத்தை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்.
2. தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றது முதல் எதிர்கொண்ட 2019 பாராளுமன்றத் தேர்தல், 2020 ஊரகஉள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 பாராளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்க ளங்கள் என அனைத்திலும் மகத்தான வெற்றியைக் கழகம் பெற்றிடும் வகையில் வியூகத்தை வழங்கி, அந்த வெற்றிக்கு ஓயாது உழைத்திட்டவரும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருபவருமான கழகத் தலைவர் முதலமைச்சருக்கு பாராட்டு தல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகக் கூட்டணி முழுமையான வெற்றிபெற்று, தி.மு.க. தலைவர் தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பு ஏற்க நாம் அனைவரும் அயராது உழைப்போம்.
3. இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு. பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கிறது.
4. உழவர்கள்-நெச வாளர்கள்-மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனை களை மக்களிடம் கொண்டு சேர்க்க பரப்புரை செய்வோம்.
5. தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் கழக அரசுக்குப் பாராட்டு.
6. ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களான மகளிர் கட்டணம் இன்றி பஸ்களில் பயணம் செய்யும் விடியல் பயணம் திட்டம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களை தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்.
7. தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர்-இளம் தலைவன் பணி தொடரத் துணை நிற்போம்!
8. ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக் கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்.
9. தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம். கல்வி நிதி ரூ.2152 கோடி தர வலியுறுத்துவதுடன் வரிப் பகிர்வின் பங்கை 50 சதவீதம் ஆக உயர்த்திட வேண்டும்.
10. தமிழர்களின் மொழி உணர்வுடன் விளை யாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிட வேண்டும்.
11. கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்.
12. ரெயில்வே திட்டங்களில் தமிழ் நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்.
13. சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறை யாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
14. பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகள், பா.ஜ.க. ஆட்சியில் மக்களை மத ரீதியாகப் பிளந்து, இந்துத்துவாக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்வி என்று ஒன்றிய அரசிடம் அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களின் நிதி உரிமை, வரி உரிமை, கல்விஉரிமை உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பறித்து, தன்னாட்சி மிக்கபுனலாய்வு அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கான கைப்பாவைகளாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, மதுரைஅரிட்டாப்பட்டி டங்ஸ்டன் திட்டம், மன்னார் வளைகுடா ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறுகள் அமைத்தல்,
தமிழ்நாட்டின் திட்டங்களுக்குப்போதிய நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு எனத் திட்டமிட்ட வஞ்ச கங்களும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்துதல், அரசியல் எதிரிகள்மீது வெறுப்பு பரப்புரைப் பேச்சுகளை உமிழ்தல், பொய் வழக்குகள் யாய்ச்சுதல், அரசு எந்திரங்களைச் சட்ட மீறலாகப் பயன்படுத்தி மாநிலஅரசுகளுக்கு மிரட்டல் விடுத்தல், ஒன்றிய அரசின் இலஞ்ச-ஊழல்களை ஆதாரத்துடன் எதிர்த்து எழுதும், பேசும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதுபொய் வழக்குகள், சிறை போன்ற அநீதிகளுமே தொடர்வதால், இத்தகைய சர்வாதிகாரப் போக்கை நடத்தி வரும் பா.ஜ.க. அரசுக்கு இப்பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
15. மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் அநீதிகளுக்கு கண்டனம்.
16. மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிட வேண்டும்.
17. சாதிவாரிக் கணக் கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக!
18. தமிழ்நாட்டின் பாராளுமன்றப் பிரதிநிதித்து வத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது.
19. கவர்னரின் அதி கார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலை நாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு பாராட்டு.
20. கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு பொதுக்குழு வன்மையான கண்டனம் தெரிவிக்கிறது.
21. அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்.
22. உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திட வேண்டும்.
23. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் தன் னாட்சி உரிமை பெற்றிட சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின் மூலம் மாநில சுயாட்சி கருத்தி யலுக்கு செயல் வடிவம் கொடுத்திட உயர்நிலைக் குழுவை நியமித்த தமிழக அரசுக்கு பாராட்டு.
24. காலநிலை மாற்றத்தால் பருவமழை காலங்கள் மாறி வரும் சூழலில் தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள களத்தில் நிற்கும் முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும், கழக தோழர்கள் உறுதுணையாக நின்று பணிபுரிய வேண்டும்.
25. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என அழகிய தமிழ்ப் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுவோம். வணிகப் பெருமக்கள் தமிழ்நாட்டில் உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழில் பெயர் எழுத வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.
26. அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவிப்பதுடன், சென்னையில் மாணவி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு 5 மாதங்களில் நீதியை பெற்று தந்த முதலமைச்சருக்கும், தமிழக காவல் துறைக்கும் பொதுக் குழு பாராட்டு தெரிவிக்கி றது.
27. எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வஞ்சக பா.ஜ.க.வையும், துரோக அ.தி.மு.க.வையும் முழுமையாக விரட்டிய டித்து, இந்தியாவின் ஜனநாயகக் காவலராம் நம் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சி தொடர்ந்திட அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறக் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் இன்று முதல் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தி, அயராது பாடுபடுவோம். தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர வைக்க பொதுக்குழு சூளுரைக்கிறது.
- கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவத்தில் சொல்பவன் நான் அல்ல.
- தி.மு.க. இதுவரை அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் உடன் பிறப்புகள் தான் காரணம்.
மதுரையில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தடம் மாறாத கொள்கை கொண்ட கூட்டம் நாம். அதனால் எந்த கோமாளி கூட்டமும் நம்மை வெல்ல முடியவில்லை. இனியும் வெல்ல முடியாது. அடுத்தாண்டு இந்த நேரத்தில் தமிழகத்தில் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது என்பது தலைப்பு செய்தியாக இருக்க வேண்டும்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவத்தில் சொல்பவன் நான் அல்ல. ஆணவமோ, மமதையோ எனக்கு எப்போதும் வராது. பணிவு தான் தலைமைத்துவத்தின் அடையாளம்.
தி.மு.க. இதுவரை அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் உடன் பிறப்புகள் தான் காரணம். சூரியன் நிரந்தரமானது. அதேபோல் தி.மு.க.வும் நிரந்தரமானது. தி.மு.க. எப்படி நிரந்தரமானதோ, அதேபோல் தி.மு.க. ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை உருவாக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க.- பா.ஜ.க. ஆட்சியில் அதலபாதாளத்திற்கு சென்றுள்ள தமிழகத்தை நாங்கள் மீட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை:
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் மதுரை உத்தங்குடியில் இன்று நடைபெற்றது.
உத்தங்குடியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில், கலைஞர் அறிவாலயம் முகப்பு தோற்றத்துடன் கூடிய பொதுக்குழு கூட்ட திடலின் முன்பாக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை முதலஅமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். பின்னர் சரியாக 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 400 பொதுக்குழு உறுப்பினர்கள், தி.மு.க.வின் அமைப்பு ரீதியிலான 23 அணிகளின் நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வின் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட 76 மாவட்டச் செயலாளர்கள் என 7 ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் நேற்று முதலே மதுரை வந்தடைந்தனர்.
அவர்களுக்கு கூட்ட அரங்கில் தனித்தனியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு அங்கு பொதுக்குழுவில் பங்கேற்பதற்கான படிவம் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட நிர்வாகிகள் பூர்த்தி செய்து கொடுத்து மினிட் புத்தகத்தில் கையெழுத்திட்டனர். தொடர்ந்து வழங்கப்பட்ட அனுமதி கடிதம் மற்றும் பேட்ஜூடன் 8 மணி முதலே தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று அமர்ந்தனர்.
பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மேடை கலைஞர் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டு நவீன டிஜிட்டல் வடிவில் கலை நுணுக்கங்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு 11 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. பல்வேறு மலர் அலங்காரத்துடன் கூடிய மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்ததும், ஏற்கனவே வந்திருந்தவர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்து வணக்கம் தெரிவித்தார்.
பின்னர் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஆர்.எஸ்.பாரதி தொடக்கவுரையாற்றினார். மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி வரவேற்றார். இதையடுத்து இரங்கல் தீர்மானத்தை டி.கே.எஸ்.இளங்கோவன் வாசித்தார்.
இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இங்கிலாந்து ராணி எலிசபெத், போப்பாண்டவர் பிரான்சிஸ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜஸ்வந்த் சிங், ராம்விலாஸ் பஸ்வான், அஜித்சிங், மார்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவர் என்.சங்கரய்யா, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரெங்கன், இ.வி.கே.எஸ்.இளங்கோவன், கம்யூனிஸ்டு தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, தா.பாண்டியன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், குமரி அனந்தன், புற்றுநோய் மருத்துவர் சாந்தா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், விவேக், அவ்வை நடராஜன், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன்அ.மா.சாமி, முரசொலி செல்வம், முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் உள்ளிட்ட மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தி.மு.க. பொதுக்குழுவில் மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
'எல்லாருக்கும் எல்லாம்' எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளனர். இத்தகைய நலத்திட்டங்களும், மாநிலத்தின் வளர்ச்சியும், தொடர்ந்திடவும், மாநில உரிமைக்கான போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கவும், நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. துளியும் சமர சமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு "ஓரணியில் தமிழ் நாடு" என உறுப்பினர் சேர்க்கையை கழகம் முன்னெடுக்க வேண்டும் என இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.
தி.மு.க.வின் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை கழகத்தின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டின் வாக்காளர்களை 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான செயல்களை மேற்கொண்டு, அடுத்து வரும் இரண்டு மாதங்களில் மாவட்ட - பகுதி - நகர - ஒன்றிய - பேரூர் - வட்ட - கிளை கழகச் செயலாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை நிறைவு செய்திட வேண்டும். அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொடங்கி, பாக முகவர்கள் வரை கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் இதில் முழுமூச்சாக உழைத்திட வேண்டும்.
புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணியை தொகுதி பார்வையாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் முழுமையாகக் கண்காணித்து வெற்றிகரமாக்கிட வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
இவ்வாறு அந்த சிறப்பு தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
தேர்தல் களப்பணி தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வினர் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றியை அள்ளிக்குவித்திட களப்பணி ஆற்றுவது, ஒற்றுமையுடன் செயல்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை தனித்தனியாக சந்தித்து திராவிட மாடல் அரசின் 4 ஆண்டு சாதனைகளை எடுத்துக்கூறி அவர்களின் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் பெற்றுத்தருவது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும் தி.மு.க.வின் தணிக்கைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் மதுரை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.
தொடர்ந்து இந்திய அரசியல் மற்றும் தமிழ் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் வகையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
மதியம் 1 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து பொதுக்குழுவில் பங்கேற்றவர்களுக்கு சைவ, அசைவ உணவு பரிமாறப்பட்டது.
- தென்னகத்தில் தலைசிறந்த சமையல் கலைஞர்களை கொண்டு உணவுகள் தயார் செய்யப்பட்டன.
- அயிரை மீன் குழம்பு, மட்டன் குழம்பு, ரசம், மோர், ஊறுகாய், ஐஸ்கிரீம், ஜிகிர்தண்டா, பீடா, வாழைப்பழம் இடம் பெற்றுள்ளது
மதுரை உத்தங்குடியில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
உத்தங்குடியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில், கலைஞர் அறிவாலயம் முகப்பு தோற்றத்துடன் கூடிய பொதுக்குழு கூட்ட திடலின் முன்பாக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். பின்னர் சரியாக 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
முன்னதாக கூட்டத்தில் 3 ஆயிரத்து 400 பொதுக்குழு உறுப்பினர்கள், தி.மு.க.வின் அமைப்பு ரீதியிலான 23 அணிகளின் நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வின் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட 76 மாவட்டச் செயலாளர்கள் என 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு முற்றிலும் குளிரூட்டப்பட்ட உணவுக்கூட அரங்கில் 48 வகையான சைவ, அசைவ உணவுக்கு சுடச்சுட பரிமாறப்பட்டன. இதற்கான நேற்று முதலே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகளை தொடங்கினர். தென்னகத்தில் தலைசிறந்த சமையல் கலைஞர்களை கொண்டு இந்த உணவுகள் தயார் செய்யப்பட்டன.
அதன்படி அசைவ உணவில் பன் அல்வா, மட்டன் எண்ணெய் சுக்கா, மட்டன் காடி சாப்ஸ், மட்டன் உப்புக்கறி, மட்டன் கோலா உருண்டை, மட்டன் ஒயிட் குருமா, வஞ்சிரமீன் வறுவல், நாட்டுக்கோழி மிளகு கறி, சிக்கன் 65, ஆம்லெட், மட்டன் பிரியாணி, எலும்பு குழம்பு, தயிர் வெங்காயம், எலும்பு தால்சா, சாதம், அயிரை மீன் குழம்பு, மட்டன் குழம்பு, ரசம், மோர், ஊறுகாய், ஐஸ்கிரீம், ஜிகிர்தண்டா, பீடா, வாழைப்பழம் இடம் பெற்றுள்ளது.
சைவ உணவில் குல்கந்து பர்பி, பனங்கற்கண்டு மைசூர்பா, கதம்ப பொரியல், உருளைக்கிழங்கு காரகறி, சவ்சவ் கூட்டு, சைவ சிக்கன் வறுவல், சைவ மீன் பிரை, வெண்டைக்காய் பிரை, காளிபிளவர் சில்லி, வெஜ் கட்லெட் (சாஸ்), பருப்பு வடை, சப்பாத்தி, சிப்பி காளான் குழம்பு, வெஜிடேபிள் பிரியாணி, ஆனியன் தயிர் பச்சடி, வெள்ளை சாதம், பருப்பு பொடி (நெய்), சாம்பார், எண்ணைய் கத்திரிக்காய் காரக்குழம்பு, தக்காளி ரசம், சேமியா பால் பாயாசம், அப்பளம், தயிர், இஞ்சி புளி ஊறுகாய் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
- கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்றது.
மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்.
* தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தி தீர்மானம்.
* ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* இஸ்லாமியர் சொத்துக்களை சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்.
* தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் தொகுதி மறுவரையறை கூடாது என தீர்மானம்.
* அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்.
* ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுக்க வேண்டும்.
* ஒவ்வொரு பூத்களில் 30% வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக்க வேண்டும் என தீர்மானம்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- தி.மு.க.வுக்கு மேலும் 2 புதிய அணிகள் உருவாக்கப்படும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
- 2 புதிய அணிகளையும் சேர்த்து தி.மு.க. அணிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து இருக்கிறது.
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்றது.
மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இங்கிலாந்து ராணி எலிசபெத், போப் பிரான்சிஸ், முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரெங்கன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து புதிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. முதலில் தி.மு.க.வுக்கு மேலும் 2 புதிய அணிகள் உருவாக்கப்படும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி கல்வியாளர்களுக்கு என்று ஒரு அணியும், மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஒரு அணியும் என 2 புதிய அணிகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 2 புதிய அணிகள் அறிமுகத்துக்கு தி.மு.க. பொதுக்குழுவில் அங்கீகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க.வில் ஏற்கனவே 23 அணிகள் உள்ளன. இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2 புதிய அணிகளையும் சேர்த்து தி.மு.க. அணிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து இருக்கிறது.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி தினத்தை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம் என்றும் தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- மாற்றுத்திறனாளி தொண்டர்களுக்காக தி.மு.க.வில் புதிய சார்பு அணி உருவாக்கப்பட்டது.
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்றது.
மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
முதலமைச்சர் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து மன்மோகன் சிங், போப் பிரான்சிஸ், இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தநிலையில் பொதுக்குழு கூட்டத்தில் புதிய அறிவிப்புகள் வெளியானது.
தி.மு.க.வில் உள்ள ஆசிரியர்கள், பேராசிரியர்களை கொண்டு கல்வியாளர் அணி என்ற புதிய அணி உருவாக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி தொண்டர்களுக்காக தி.மு.க.வில் புதிய சார்பு அணி உருவாக்கப்பட்டது.
புதிய அணிகள் உருவாக்கப்பட்டதை அடுத்து தி.மு.க.வில் உள்ள அணிகளின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்தது.
- பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, அன்பழகன் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்றது.
மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
முதலமைச்சர் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து மன்மோகன் சிங், போப் பிரான்சிஸ், இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.






